Saturday 21st of December 2024 09:12:34 AM GMT

LANGUAGE - TAMIL
55 அடுக்குமாடி உச்சியில் உள்ள நீச்சல் குளம்
55 அடுக்குமாடி உச்சியில் ஒரு நீச்சல் குளம்...!

55 அடுக்குமாடி உச்சியில் ஒரு நீச்சல் குளம்...!


உலகிலேயே முதன்முறையாக 55 அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியிலேயே 360 டிகிரி கோணத்தில் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தின் நான்குப்புற சுவர்களும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே குளிப்பதற்கேற்ற வகையில் வசதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த மாத்திரத்தில் வலைத்தளவாசிகள் பலரும் இதற்குள் எப்படி செல்ல முடியும் என கேள்வியெழுப்பியிருந்தனர். இந்த கேள்வி குறித்த தகவல் அறிந்த நீச்சல் குளத்தினை வடிவமைத்த கேம்பஸ் நீச்சல் குளம் கட்டமைப்பு நிறுவனத்தின் நிறுவனர் ,ஆலன் கேன்சலே பதில் அளித்துள்ளார்

நீச்சல் குளத்தின் கீழே சுழலும் படிக்கட்டுகள் உள்ளன. இவை நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் இருந்து மக்களை கொண்டு செல்லும் எனவும் குளத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் ஒரு பட்டனை அழுத்தினால் அந்த படிக்கட்டுகள் மீண்டும் வந்து அழைத்துச் செல்லும் எனவும் ஆலன் கூறியுள்ளார். பார்ப்பவர்களை பிரமிப்படைய செய்யும் வகையில் இந்த நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது.


Category: தொழில்நுட்பம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE